அடித்தட்டு மக்களின் ஆதரவு இருந்தால் தான் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முடியும்! - பாஜக விவசாய அணி தலைவர் உறுதி!

தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில விவசாய அணியின் தலைவர் நாகராஜ், அடித்தட்டு மக்களை பாஜகவின் பக்கம் ஈர்க்க வேண்டும் என தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.



திருப்பூர்: அடித்தட்டு மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியும் என பாஜக மாநில விவசாய அணியின் தலைவர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில விவசாய அணியின் தலைவர் நாகராஜ் கலந்து கொண்டார்.



இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது,

அதிமுக திமுகவின் வாக்கு வங்கிகள் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அடித்தட்டு மக்களிடம் நமது உறவை மேம்படுத்த வேண்டும். அவர்களது நலனில் அக்கறை காட்ட வேண்டும். அடித்தட்டு மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கொண்டு வர முடியும்.

விவசாயிகளுக்கு பாஜக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்திலும் இன்று வரை வெற்றியை கண்டுள்ளது. எனவே நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் அடித்தட்டு மக்கள் பாஜகவினர் பக்கம் ஈர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

1. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை - நல்லாறு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்

2. மழைக்காலங்களில் அமராவதி ஆற்றில் உபரியாக செல்லும் தண்ணீரை உப்பாறு அணை வட்டமலை கரை அணை நல்லதங்காள் அணைகளுக்கு தண்ணீரை நிரப்பி விட வேண்டும்.

3. கால்நடைகளை வேட்டையாடும் தெரு நாய்களை நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும்.

4. உழவர் சந்தையில் கடை வைத்துள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவதால் நகராட்சி நிர்வாகம் உழவர் சந்தை சுற்றிலும் உள்ள தனியார் காய்கறி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. தாராபுரம் நகரின் மையப்பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகிறது எனவே உயிர் இழப்புகளை தடுப்பதற்கு மாற்று வழியை உடனே தீர்மானிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. தென்னை விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்.

7. ஆவின் நிறுவனம் பாலுக்கு கூடுதல் தொகையை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும்.

8. காங்கேயத்தில் சாலையோர வியாபாரிகள் கடைகளை மட்டும் உள்நோக்கத்துடன் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி வருகிறது எனவே காங்கேயம் நகர மன்ற தலைவரை இந்த கூட்டம் கண்டிக்கிறது.

9. கீழ் பவானி கால்வாய் கான்கிரீட் தளம் அமைக்க இப்பகுதி விவசாயிகளின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறான தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில் தேமுதிகவின் திருப்பூர் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவரான ஹேமமாலினி கட்சியை விட்டு பாஜகவில் இணைந்தார்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட பொருளாளர் பார்த்தசாரதி மாவட்ட செயலாளர் மௌன குருசாமி பொதுச் செயலாளர் சிவபாலன் செல்வ பிரபு மற்றும் மண்டல நகர ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...