உடுமலை மாரியம்மன் கோவில் நன்கொடை பெறுவதில் முறைகேடு - தூக்கத்தில் நடந்த தவறு என அதிகாரி விளக்கம்!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நன்கொடை வழங்கும் இடத்தில் ரூ.200 நன்கொடை வழங்கினால் ரூ.100க்கான ரசீது வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இரவு பகலாக ஊழியர்கள் உறக்கமின்றி வேலை செய்ததால் தவறு நிகழ்ந்து விட்டதாக செயல் அலுவலர் சினிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நன்கொடை பெறுவதில் நடைபெற்ற தவறு தூக்கத்தில் நிகழ்ந்ததாக அதிகாரி விளக்கம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கிய நிலையில் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நன்கொடை வழங்கும் இடத்தில் ரூ.200 நன்கொடை வழங்கினால் ரூ.100க்கான ரசீது வழங்கப்பட்டு முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இதுதொடர்பாக உடுமலை இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சக்திவேல் தலைமையில் செயல் அலுவலர் சினிவாசனிடம், இதுகுறித்து நேரில் விளக்கம் கேட்கப்பட்டது.

அப்பொழுது பேசிய அவர், இரவு பகலாக ஊழியர்கள் பணியாற்றி வருவதால் தூக்க கலக்கத்தில் சிறு தவறு ஏற்பட்டு விட்டது. இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இனி பார்த்துக் கொள்ளப்படும் என்று புது விளக்கம் அளித்துள்ளார்.

தூக்கத்தில் இருந்த காரணத்தால் தவறு ஏற்பட்டு விட்டது என செயல் அலுவலர் சினிவாசன் விளக்கம் ஏற்கக் கூடியது அல்ல. உரிய விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...