தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 கட்டுவிரியன் பாம்புகள் - பத்திரமாக மீட்ட இயற்கை ஆர்வலர்!

தாராபுரம் அருகேயுள்ள மூலனூரில் விவசாய தோட்டத்தில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 5 அடி நீளம் கொண்ட 2 கட்டுவிரியன் பாம்புகளை இயற்கை ஆர்வலர் அன்பரசு பத்திரமாக பிடித்து மற்றொரு கிணற்றில் பாதுகாப்பாக விட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூர் அருகே விவசாய தோட்டத்தில் தண்ணீர் தொட்டியில் இருந்த 5 அடி நீளமுள்ள 2 கட்டுவிரியன் பாம்புகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.

மூலனூர் அருகே உள்ள இடைக்கல்படி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராணி. இவரது விவசாய தோட்டத்தில் சுமார் 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டி உள்ளது.

இந்த தண்ணீர் தொட்டியில் 5 அடி நீளம் உள்ள அதிக விஷத்தன்மை கொண்ட இரண்டு கட்டுவிரியன் பாம்புகள் இரவு நேரத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்துள்ளது. தண்ணீர் தொட்டியில் சுமார் 2 அடி அளவு தண்ணீர் இருந்ததால் மேலே வர முடியாமல் இரண்டு பாம்புகளும் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.



இதனையடுத்து செல்வராணி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்பரசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த இயற்கை ஆர்வலர் அன்பரசு மற்றும் அவரது நண்பர்கள் நேரில் சென்று இரண்டு பாம்புகளையும் தண்ணீர் தொட்டியில் இருந்து உயிருடன் மீட்டனர்.

மேலும் அவற்றை அருகே இருந்த பாழடைந்த கிணற்று பகுதியில் உயிருடன் பாதுகாப்பாக விட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...