தொண்டாமுத்தூர் அருகே வட மாநில இளைஞருக்கு கத்திக்குத்து - சிறுவன் உட்பட மூவர் கைது!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஹிபுல் உசேன் என்பவர் நேற்றிரவு தொண்டாமுத்தூர் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றனர். சிறுவன் உட்பட இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற வட மாநில இளைஞரை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலம் பிரம்மாபிலைசேர்ந்தவர் ரஹிபுல் உசேன் (21). இவர் கோவை தொண்டாமுத்தூர் குபேரபுரி பகுதியில் தனது சகோதரருடன் தங்கி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ரஹிபுல் உசேன் தனது சகோதரர் முகமது பைசலுடன் கடைக்குச் சென்று மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு மீண்டும் அறைக்குச் செல்ல சாலையில் நடந்து சென்றனர்.

அப்போது மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மூன்று பேர் ரஹிபுல் உசேனிடம் தகராறு செய்து, அவதூறாக பேசி தாக்கியுள்ளனர்.

அப்போது சந்துரு என்ற இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஹிபுல் உசேனை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து 3 பேரும் தப்பியோடியுள்ளனர்.



இதையடுத்து அங்கிருந்தவர்கள் வட மாநில தொழிலாளியை கத்தியால் குத்திய ஆலாந்துறையை சேர்ந்த சந்துரு (19), மற்றும் 16 வயது சிறுவனை மடக்கி பிடித்து தொண்டாமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து காயமடைந்த ரஹிபுல் உசேன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற தொண்டாமுத்தூரை சேர்ந்த அருண்குமார் (20) என்பவரையும், போலீசார் மடக்கி பிடித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்துரு மீது பள்ளி மாணவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...