15 நாட்களுக்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்க..! - உடுமலை அமராவதி சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கோரிக்கை!

உடுமலை செயல்பட்டு வரும் அமராவதி சர்க்கரை ஆலைக்கு அரவைக்காக அனுப்பப்படும் கரும்புகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என அப்பகுதி கரும்பு விவசாயிகள் ஆலை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அமராவதி சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்படும் கரும்புகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கலை ஆலை அதிகாரிகள் மற்றும் கரும்பு பயிரிடுவோர் சங்க நிர்வாகிகளான விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அமராவதி சர்க்கரை ஆலை சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

1. தமிழ்நாடு அரசு மூலம் சர்க்கரை ஆலையை புனரமைக்க தேவையான நிதியை பெற்று ஆலையை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. நடப்பாண்டில் அரவைக்கு அனுப்பப்படும் கரும்புகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.

3. கரும்பு வெட்டும் ஆட்கள் பிரச்னை மற்றும் கூலி பிரச்னை போன்றவற்றை பேசி முடிக்க வேண்டும்.

4. ஆலைக்கு நடப்பாண்டில் கூடுதல் நிதி ஒதுக்கி, வேலை செய்வதற்கான பணப்பற்றாக்குறையை போக்க சர்க்கரைத்துறை ஆணையாளர் கூடுதல் நிதி ஒதுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

5. ஆலை அரவை துவங்குவது முதல் இலக்கினை எட்டும் வரை இடைவிடாது நிறுத்தாமல் தொடர்ந்து இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

6. கரும்பு முறையாக வெட்டப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

7. கரும்பு பிரிவில் பல ஆண்டு காலமாக நீடித்து வரும் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

8. ஆலைக்கு கரும்பு பதிவு செய்துள்ள இடங்களில் ரோடு வசதி இல்லை தட வசதி இல்லை. பாதைகளை சரி செய்து தடையின்றி கரும்பு வெட்டுவதை உறுதி செய்ய வேண்டும்.

9. எரிசாராய ஆலை தற்போது இயங்குவதை விட மேலும் நன்றாக இயங்கி லாபம் ஈட்டுவதற்கு ஆலை நிர்வாகம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

10. கரும்பு கட்டுமான உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

11. தொழிலாளர்களுக்கு நிலுவை இல்லாமல் ஊதியம் வழங்கிட வேண்டும். பி.எப். நிலுவையை உடனடியாக கட்ட வேண்டும்.

12. தினக்கூலி வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். வெட்டுக்கூலி, வண்டி வாடகையை வாரந்தோறும் வழங்க வேண்டும்.

13. எடைத்தளம் கேமராவை பராமரிக்க வேண்டும். டீசல் பங்கில் உள்ள ஜெனரேட்டர் வெயிலுக்கும், மழைக்கும் நனைந்து பாதிக்கப்படுகிறது. அதற்கு நிழற்கூரை அமைக்க வேண்டும்.

14. ஆலையில் உள்ள பணியாளர் பற்றாக்குறையை போக்க பிற ஆலைகளில் இருந்து அனுபவம் மிக்க தொழிலாளிகளை அயல் பணியின் கீழ் வரவழைத்து ஆலையை நிற்காமல் நல்ல முறையில் இயக்க வேண்டும்.

15. கடந்த ஆண்டு கரும்பு பதிவு செய்து வெட்ட காலதாமதம் ஆனதால் வேறு வழியின்றி கரும்பினை வெட்டி வெளியிடங்களுக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி கரும்பு வழங்காதவர்கள் மீது பைலா கேஸ் பதியப்பட்டுள்ளது.

16. இந்த ஆண்டு சம்பந்தப்பட்ட விவசாயி ஆலைக்கு கரும்பு கொடுத்தால் அவர் மீது பதியப்பட்ட பைலா வழக்கினை ரத்து செய்ய வேண்டும்

இவ்வாறான தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.



கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் கரும்பு பயிரிடுவோர் சங்கத் தலைவர் சண்முகவேலு, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், உடுமலை, மடத்துக்குளம், கணியூர், குமரலிங்கம், நெய்க்காரப்பட்டி, ஒட்டன்சத்திரம், பகுதியில் இருந்து ஏராளமான கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...