திருப்பூரில் காவலர்களின் மனஉளைச்சலை போக்க யோகா பயிற்சி - காவலர்கள் பங்கேற்பு!

திருப்பூரில் பணியாற்றும் காவலர்களுக்கு பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன உளைச்சலை போக்கும் வகையில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் காவலர்களுக்கு மன உளைச்சலை போக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது.

காவல்துறையில் பணியாற்றக்கூடிய காவலர்கள் ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.



இந்நிலையில் காவலர்களுக்கு சரியான உடற்பயிற்சி மற்றும் மன வலிமையை ஊக்கப்படுத்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது.



மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில், மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் வாழ்க வளமுடன் அமைப்பின் சார்பில் அதிவிரைவு படை மற்றும் ஆயுதப்படை காவலர்களுக்கு இந்த யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.



இந்த யோகா பயிற்சியில் மன வலிமையை ஊக்கப்படுத்தும் யோகா பயிற்சியும், மூச்சுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்ற கூடிய காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...