கோவை நாயக்கன்பாளையம் அருகே அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள் - பரபரப்பு

கோவை பெரியநாயக்கம் பாளையம் வழியாக இயக்கப்படும் அரசு பேருந்தை சரிவர இயக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திப்ரியா தலைமையில் அந்த பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: நாயக்கன்பாளையம் வழியாக பேருந்து இயக்காததைக் கண்டித்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சியில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் மலைப்பகுதியான பாலமலை பகுதியில் மட்டும் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் உள்ளனர்.

இவர்களுக்காக கோவையிலிருந்து பெரியநாயக்கன்பாளையம் வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல மேட்டுப்பாளையத்திலிருந்து காரமடை, பெரியநாயக்கன்பாளையம் வழியாகவும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மேட்டுப்பாளையத்திலிருந்து வரும் எண்.2 கொண்ட அரசு பேருந்து சரியாக வரவில்லை. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாக்கினர். இதுகுறித்து பொதுமக்கள் நாயக்கன்பாளையம் ஊராட்சித்தலைவர் சாந்திப்ரியாவிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.



இதனையடுத்து அவர் தலைமையில் மேட்டுப்பாளையம் அரசு பேருந்து கழக கிளை மேலாளருக்கு மனு அளித்தும், பேருந்து சரியாக வராததால் இன்று காலை 10.30 மணியளவில் பேருந்தை ஊராட்சித்தலைவர் தலைமையில் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிளை மேலாளர் பிரகாஷ் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட பேருந்து விடுவிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...