கோவையில் முதல்வர் புகைப்பட கண்காட்சியில் நோன்பு திறந்த இஸ்லாமியர்கள்!

கோவை வஉசி மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு குறித்த "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" கண்காட்சியை காணவந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மைதானத்தில் நோன்பு திறந்தனர்.



கோவை: முதல்வர் புகைப்பட கண்காட்சியில் இஸ்லாமியர்கள் நோன்பு திறந்தனர்.

கோவை வஉசி மைதானத்தில், "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" என்ற புகைப்பட கண்காட்சி கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியை தினமும் ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்து வருகின்றனர். தினமும் மாலையில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இந்த கண்காட்சியை காண, திமுக வடக்கு மாவட்டம் கரும்புக்கடை பகுதி கழக செயலாளர் ஜெய்லாப்தீன் இஸ்லாமிய மக்களை அழைத்து வந்தார்.



புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட இஸ்லாமியர்கள், நோன்பு காலத்தையொட்டி, வஉசி மைதானத்திலேயே இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் நோன்பு திறந்தனர்.

இதைத் தொடர்ந்து புகைப்பட கண்காட்சி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ ஆகியவை நடைபெற்றது.



இந்த நிகழ்வுகளில் திமுக மாவட்டச் செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல தலைவர் தமிழ்மறை, மாவட்ட பொருளாளர் ரகுமான் மற்றும் பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...