ஊட்டி மாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடந்த தேரோட்டம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.


நீலகிரி: ஊட்டி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றாக ஊட்டி மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

இக்கோவிலின் திருவிழா கடந்த மாதம் 16ஆம் தேதி கலச பூஜை மற்றும் பூச்சொரிதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. கோவில் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து வருகிற 21ஆம் தேதி வரை என, ஒரு மாத காலத்திற்கு பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெறும்.

நேற்று படுகர் இன மக்கள் சார்பில் விழா நடந்தது. இதனை முன்னிட்டு ஊட்டி மாரியம்மன், ஹெத்தையம்மன் அலங்காரத்தில், காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்தார். தேரோட்டம் மாரியம்மன் கோவிலில் தொடங்கி கமர்சியல் சாலை, காபி அவுஸ், லோயர் பஜார் மற்றும் மெயின் பஜார் வழியாக வந்தது.

இதை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்தும், நடனமாடியும் அம்மனை வீதி உலா அழைத்து வந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...