கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குப்பைகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.


தாராபுரம்: தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் குப்பைகளை முறையாக அகற்றாததால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கவுண்டச்சிபுதூர் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி மதிவாணி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆயிஷா, சுரபி, மணி, கார்த்திக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் சங்கர், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி முழுவதும் குப்பைகள் அகற்றாமல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும். ஊராட்சி முழுவதும் தார்ச்சாலைகள் மற்றும் கான்கிரீ்ட் சாலைகள் போடவேண்டும்.

ஊராட்சி தலைவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்போது சொத்து விவரங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரூ.1 லட்சம் மட்டுமே என கணக்கில் காட்டியுள்ளார். தற்போது 3 ஆண்டுகள் கடந்த நிலையில் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஊராட்சி நிர்வாகம் டெண்டர்கள்விட மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், 3 மாதங்கள் முன்பு ஊராட்சி நிர்வாகத்தை கலைக்க உத்தரவு பிறப்பித்தார். பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெறச் செல்லும்போது ஊராட்சியில் லஞ்சம் பெறப்படுகிறது. உடனடியாக, மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்றாவிட்டால் இந்து மக்கள் கட்சி சார்பாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...