திருப்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் விதிமீறல் - துணைமேயர் ஆய்வு

மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் திடீர் ஆய்வு செய்தார். விதிமுறைகளை மீறிய கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.



திருப்பூர்: திருப்பூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையமானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ 38 கோடியே 81 லட்சம் மதிப்பில் கடந்தாண்டு புதுப் பொலிவுடன் கட்டப்பட்டது.

தற்போது, பழைய பேருந்து நிலையத்தில் செல்போன் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், என 80க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, அக்கடைக்காரர்கள் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகளின் வெளியிலேயே பொருட்களை வைத்தும்,ஒரு சில கடைக்காரர்கள்அனுமதியின்றி நடைபாதைகளில் கடைகள் அமைத்தும்,கடைகளின் சுவர்களை இடித்து தனியாக ஒரு அறையும் அமைத்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது.



இதைத்தொடர்ந்து, மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை திடீர் ஆய்வு செய்தார்.



அப்போது, விதிமுறைகளை மீறி பெரும்பாலான கடைகள், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் அமைத்திருந்ததும், அதேபோல் மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியும் பெறாமல் கடைகளை இடித்து தனியாக ஒரு அறை அமைத்து இருந்ததும் தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் ஆலோசனை மேற்கொண்டு, விதிமுறைகளை மீறிய கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணைமேயர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...