பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் - திருப்பூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார்

திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் தினேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் அருகே பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட எஸ்.பியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றன.

அதேபகுதியில் வசிக்கும் கருப்பண்ணசாமி என்கிற தினேஷ் கடந்த சில வருடங்களாக கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள குடும்பங்களின் பலவீனங்களை அறிந்து கொண்டு தொலைபேசியிலும் நேரிலும் மிரட்டி பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், பணம் கொடுக்க மறுப்பவர்களை கஞ்சா விற்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து, கைது செய்ய வைப்பேன் அல்லது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுவேன் என கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்த கணக்கம்பாளையம் பகுதி மக்கள், பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...