திருடிய நகைகளில் பங்கு போடுவதில் தகராறு - உதகையில் வசமாக சிக்கிய திருடர்கள்!

திருடிய நகைகளை பங்கு போடுவது தொடர்பாக, நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த திருடர்கள் கண்ணன், மோகன் இருவரிடையே தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் இருந்த இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 5 சவரன் தங்க நகைகளை மீட்டனர்.



நீலகிரி: திருடிய நகைகளை பங்கு போடுவது தொடர்பாக தகராறில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

உதகை நகரின் மைய பகுதியில் உள்ள திமுக அறிவாலயம் அருகே மதியம் 2 நபர்கள் மதுபோதையில் நகைகளை கையில் வைத்து கொண்டு பங்குபோட சண்டையிட்டு கொண்டிருந்தனர். அது குறித்து தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்த உதகை B1 காவல்துறையினர் இருவரையும் பிடித்து சோதனையிட்டனர்.

அப்போது அவர்களிடம் 5 சைன்கள், 5 மோதிரங்கள், 3 ஜோடி கம்மல்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள், உதகை மிஸ்னரி ஹில்ஸை சேர்ந்த கண்ணன்(வயது50), உதகை உட்லாண்ட்ஸ் குப்பத்தை சேர்ந்த மோகன் (வயது57) என்பது தெரியவந்தது.

மேலும், இருவரும் நேற்று இரவு உதகை கீழ்தலையாட்டு மந்தை சேர்ந்த திம்மைய்யா(வயது43) என்பவரது வீட்டில் நகைகளை திருடியதும் தெரியவந்தது. இரவில் திருடிய நகைகளை இன்று மதியம் பங்கு போடும்போது தகராறு ஏற்பட்டபோது அவர்கள் சிக்கி கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்த 5 சவரன் நகைகள் மீட்கப்பட்ட நிலையில், வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...