3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்குக..! - கோவை மாநகராட்சி குறைதீர்க் கூட்டத்தில் ஊழியர்கள் மனு!

கோவை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில், 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டுமென கோரியிருந்தனர்.


நீலகிரி: கோவை மாநகராட்சியால் 93 மாநகராட்சிப் பள்ளிகள் நடத்தப்பட்டுவருகிறது.

இதில் சுமார் 400 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பள்ளிக்கு 3 பேர் என்ற எண்ணிக்கையில், காவலாளி மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக இவர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவை துப்புரவு தொழிலாளர் தொழிலாளர் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் சிலர் மாநகர மேயரிடம் மனு அளித்தார்.

அதில், தொழிலாளர்களுக்கு ரூ.250 மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், திருத்தியமைக்கப்பட்ட தொகை நாளொன்றுக்கு ரூ.484 என்று தெரிவிக்கப்பட்டது. திருத்தப்பட்ட ஊதியத்திற்கான தொகை ஒதுக்கப்பட்ட போதிலும், அதை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை.

"ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சினை ஒரு நீண்ட பட்டியலாகும், தொழிலாளர்களில் பெரும்பாலானோருக்கு திருத்தப்பட்ட ஊதியத் தொகை குறித்த அறிதல்கூட இல்லை. இந்த குறைந்த ஊதியத்தைப் பெற அவர்கள் போராடிவருகின்றனர். இவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி மிகப் பெரிய ஊழல் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், ஒப்பந்தாரர்கள், நிர்வாகிகள் குறித்த எந்தத்தகவலுக்கும் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.



இது குறித்துப் பேசிய சீரநாயக்கன்பாளையம் பள்ளியில் 15 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக இருந்துவரும் மதனா கூறுகையில், "5 ஆண்டுகளாக நாங்கள் இதே பிரச்சினையை எதிர்கொள்கிறோம். குடும்பத் தேவைகளுக்காக மட்டுமே நாங்கள் வேலை செய்கிறோம். ஆனால், நிர்வாகம் எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளவில்லை" என்றார்.

பி.என்.புதூர் பள்ளியைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளி மணிமேகலை கூறுகையில், "தினசரி கூலி வேலை செய்து, மிகக்குறைவாக சம்பாதித்து வரும் கணவருடன் வசித்து வருகிறேன். குழந்தையை அருகில் உள்ள அங்கன்வாடியில் விட்டுச்செல்கிறேன். கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததாலும், திருத்தப்பட்ட ஊதியத் தொகையை கிடைக்காததாலும் குடும்பத்தை நடத்துவது கடினமாக உள்ளது என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...