தாராபுரம் அருகே இரவு நேரங்களில் மரங்களை வெட்டிக் கடத்தும் மர்ம கும்பல்!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் வளர்க்கப்பட்டு வந்த 7 லட்சம் மதிப்பிலான மரங்களை வெட்டி கடத்திய கும்பலைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஓடும் அமராவதி ஆறு, தாராபுரம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு உயிர் நாடியாக இருந்துவருகிறது.

இந்த ஆற்றின் கரையோர பகுதியில் இருபுறமும் வேம்பு, தீக்குச்சி மரம், புளியமரம், சவுக்கு, தேக்கு மரம் உள்ளிட்ட மரங்களை வனத்துறையினர் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அலங்கியம் கூடுதுறை பகுதியில் புறம்போக்கு நிலத்தில் உள்ள விலை உயர்ந்த மரங்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் வெட்டி லாரிகள் மூலம் கடத்திச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம், கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ.7 லட்சம் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மரங்களை வெட்டி கடத்தி சென்ற கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...