தமிழக விவசாயிகளால்தான் திமுக அரசு வீழும்..! - பாஜக மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் காட்டம்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பிஏபி வாய்க்கால் கரையோரம் உள்ள விவசாயிகளின் ஆழ்துளை கிணறு மற்றும் மின் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். விவசாயிகளால்தான் திமுக அரசு வீழப்போகிறது என்று பாஜக மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதப்பூர் ஊராட்சியில் நல்லாகவுண்டம் பாளையத்தில் மத்திய அரசின் இல்லம்தோறும் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.



இதில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜி கே நாகராஜ் கலந்து கொண்டார்.



இதைத் தொடர்ந்து, பொங்கலூரில் பாஜக விவசாய அணியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. விவசாய அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



இது குறித்துப் ஜி கே நாகராஜ் பேசியதாவது:

பிஏபி வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள விவசாயிகளின் ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளுக்கான மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் வறட்சியை போக்கும் வகையில் குளம் குட்டைகளில் நீர் செரிவூட்டும் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.

தக்காளி, வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு மாநில அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

வாழை போன்ற பயிர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டை தனிப்பட்ட விவசாயிகளின் இழப்பீட்டை பொருத்து வழங்க வேண்டும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கால்நடை தீவனங்களை மானிய விலையில் அரசு கொள்முதல் செய்து தர வேண்டும்,

குறைந்தபட்ச விலையாக மாட்டு பாலுக்கு 50 ரூபாயாகவும், எருமை பாலுக்கு 70 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். அரசு கொள்முதல் செய்யும் கொப்பரை விலையை கிலோ ஒன்றுக்கு 150 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசே தேங்காயை கொள்முதல் செய்து பொது விநியோக திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டப்பட்டு தேங்காய் எண்ணெய்யாக வழங்க வேண்டும்.

ஆனைமலை நல்லாறு திட்டத்தினை உடனடியாக செயல்படுத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை சரியாக தமிழக அரசு பராமரிக்காததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.

நெல் கொள்முதல் நிலையங்களை சரி செய்யாவிட்டால் விரைவில் நெல் மூட்டைகளோடு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்துவார்கள். விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த ஒரு திட்டங்களையும் முறையாக செயல்படுத்தவில்லை. விவசாயிகளால் தான் திமுக அரசு வீழப்போகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...