கோவையில் கனிமவளக் கொள்ளையை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் - திமுக ஊராட்சித் தலைவர் மீது பாஜகவினர் தாக்குதல்!

கோவை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கனிமவள கொள்ளையை தட்டி கேட்ட நெம்பர் 10 முத்தூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கிணத்துக்கடவு காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் திமுகவை சேர்ந்த சதீஷ்குமார்.

நேற்று நள்ளிரவு நேரத்தில் ஊராட்சிக்கு அருகில் கனிமவள கொள்ளை நடப்பதாகவும், அதை தட்டிக்கேட்ட, தங்களை மிரட்டுவதாகவும் நெம்பர் 10 முத்தூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் சதீஷ்குமாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, இரு சக்கர வாகனத்தில் அங்கு சென்ற ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார், கனிமவள கொள்ளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாஜக நிர்வாகிகளான சாந்து, கருப்புசாமி, கைலாஷ், ஈஸ்வரன், ஆகியோரிடம், இது உங்கள் இடமாக இருந்தாலும் முறைப்படி அனுமதி வாங்கித்தான் மண் எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் எல்லோரும் கேட்கத்தான் செய்வார்கள், அப்படி தட்டி கேட்பவர்களை மிரட்டுவது தவறு என்று கூறியுள்ளார்.

அதற்கு அவர்கள், அப்படித்தான் நாங்கள் மண் எடுப்போம், அதை கேட்க நீ யார்? என்று தகாத வார்த்தைகளால் திட்டி. சதீஷ்குமார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இதனைத் தொடர்ந்து, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செந்தில் குமார் தலைமையில் நிர்வாகிகள் ராமலிங்கம், பேரூராட்சி தலைவர் கதிர்வேல், நகர செயலாளர் கனகராஜ்,பொதுக்குழு உறுப்பினர் நடராஜன் மாவட்ட கவுன்சிலர் ராஜன் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபு(எ)திருநாவுக்கரசு, ரத்தினசாமி,விஜய சங்கர்,சின்ராசு(எ) செந்தில்குமார்,அபின்யா அசோக்குமார்,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கிணத்துக்கடவு காவல்நிலையத்திற்கு வந்து தாக்குதல் தொடர்பாக புகார் அளித்தனர்.



இந்தநிலையில், ஊராட்சி மன்றத்தலைவர் சதீஷ்குமார் தாக்கப்பட்டதை கேள்விப்பட்ட நெம்பர் 10 முத்தூர் பகுதியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தாக்குதல் நடத்திய பாஜகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கிணத்துக்கடவு காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகையில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேசிய ஆய்வாளர் செந்தில்குமார், தாக்குதல் நடத்திய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம். அதனால், அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதனால் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக நிர்வாகிகளும் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கிணத்துக்கடவு காவல்நிலையதிற்கு திரண்டு வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...