வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்..! - கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், சமீப காலமாக வழக்கறிஞர்கள் மீது தாக்குதல், கொலை வெறி செயல்கள் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினர்.



இதனால், வழக்கறிஞர்களின் உயிருக்கும் தொழிலுக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தல் நிகழ்வதாகவும் கூறிய வழக்கறிஞர்கள், இவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை குழு அமைத்து நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.



இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...