பல்லடம் அருகே பெண்ணை தாக்கிய ஊராட்சித் தலைவர் - போலீசார் விசாரணை

பல்லடம் அருகே சொத்து பிரச்னையால் ஏற்பட்ட முன்விரோதத்தால் பெண் ஒருவரை , பருவாய் ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் இரும்புக் கம்பியால் தாக்கியதில், படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். விவசாயியான அருண்குமார் 25 மாடுகள், கோழிப்பண்ணை வைத்து வளர்த்து வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அருண்குமார் வளர்த்து வரும் மாடுகள் திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டு சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.



நேற்று முன்தினம் ஒரு மாடு மட்டும் திடீரென இறந்துள்ளது. இது குறித்து, கால்நடை மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்த, அருண்குமார் மாடுகள் உட்கொள்ளும் புண்ணாக்கில் யாரோ விஷம் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இரண்டு வருடங்களாக அருண்குமாருக்கும் அவரது அக்கா மற்றும் அருண்குமாரின் மைத்துனரும் பருவாய் ஊராட்சி மன்ற தலைவருமான ரவிச்சந்திரன் ஆகியோருக்கு இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அருண்குமாரின் வீட்டுக்கு திடீரென வந்த பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், அருண்குமாரின் மனைவி கவிதாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த கவிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவிதா பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் குறித்து கவிதா அளித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.



இது குறித்து கவிதா கூறுகையில், எங்களது வாழ்வாதாரமே மாடுகளை நம்பி தான் உள்ளது. 25 மாடுகளை கொல்வதற்கு விஷம் வைத்தது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மீது சந்தேகம் உள்ளது. மாடுகள் இறந்தது தொடர்பாகத்தான் பேச வருகிறார் என நினைத்தேன்.

என்னை இரும்பு கம்பியால் ஊராட்சி தலைவர் தாக்கினார். பருவாய் கிராமத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தாக்குதலில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...