கோவையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

கோவையில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் 500 குழந்தைகள் கண்டறிப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்விப் பணி இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையைக் கண்டறியும் பணி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கணக்கெடுப்பில் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது,

கோவை உட்பட 15 மாவட்டங்களில் பள்ளி செல்லாத குழந்தைகளின் கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் தொடங்கியுள்ளது. இப்பணியில் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். துல்லியமான எண்களை பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களைக் கண்டறிய, அந்தப் பள்ளி ஆசிரியர்கள், அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று, எத்தனை பேர் பள்ளியை விட்டு பாதியில் வந்து சென்றுள்ளனர் என்ற விவரங்களைப் பெற்று கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, சர்வே என்ற மொபைல் செயலியில் பதிவேற்றப்படுகிறது. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்கின்றனர்.

மேலும் கண்டறியப்பட்டுள்ள குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 4 நாட்களில் 500 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் கல்வியாண்டிலும் அவர்களுக்கு தொடர்ந்து கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...