கோவை ஏர்போர்ட்டில் ஸ்கேனர் ஆபரேட்டர்கள் நியமனம் - விமான நிலையம் ஆணையகம் நடவடிக்கை!

கோவை விமான நிலையத்தில் காலியாக இருந்த ஸ்கேனர் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு 4 ஊழியர்களை விமான நிலைய ஆணையகம் நியமித்துள்ளது. அடுத்த மாதம் முதல் உள்நாட்டுப் பிரிவில் 350 டன் சரக்குகள் கையாளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த சரக்கக வளாகம். உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பல்வேறு வெளிநாடுகளுக்கும் சரக்குகள் கையாளப்படுகின்றன.

மாதந்தோறும் சராசரியாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 700 டன் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரவில் 150 டன் வீதம் 850 டன் எடையிலான சரக்குகள் கையாளப்பட்டு வந்தன.

புதிய விதியின்படி ‘ஸ்கேனர் ஆபரேட்டர்’பணிக்கு ஊழியர்கள் நியமிக்க காலதாமதம் ஏற்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது நான்கு ஊழியர்களை விமான நிலைய ஆணையகம் நியமித்துள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

ஒவ்வொரு மாதமும் கோவையிலிருந்து அனுப்புவது மற்றும் கோவைக்கு அனுபப்படுவது என இரண்டும் சேர்த்து 700 டன் சரக்குகள் கையாளப்பட்டு வந்தன. விமான நிறுவனங்களே ஸ்கேனர் ஆபரேட்டர்களை நியமித்து வந்த நிலையில், விமான நிலைய ஆணையகம் புதிய விதியை அமல்படுத்தியது.

அதன்படி விமான நிலைய ஆணையகம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டுமே இப்பணியில் அமர்த்த வேண்டும். கோவையில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாத காரணத்தால், கடந்த 3 மாதங்களாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் மாதந்தோறும் கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்படும் 350 டன் சரக்குகள் மட்டும் வேறு விமான நிலையங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான நிலைய ஆணையக தலைமையகம் கோவைக்கு 4 ஸ்கேனிங் ஆபரேட்டர்களை நியமித்துள்ளது. அதில், ஒருவர் நேற்று முன்தினம் பணியில் சேர்ந்து விட்டார். மீதமுள்ளவர்கள் சில நாட்களில் பணியில் சேர உள்ளனர். மே மாதம் முதல் நான்கு பேரும் பணியாற்ற தொடங்குவார்கள்.

இதனால், மீண்டும் வழக்கம் போல் சரக்கு போக்குவரத்து கையாளும் அளவு பழைய நிலைக்கு திரும்பும். கோவை விமான நிலையத்துக்கு குறைந்தபட்சம் 10-க்கும் மேற்பட்ட ஸ்கேனிங் ஆப்ரேட்டர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான ஊழியர்கள் நேர்காணல் நடவடிக்கையை விமான நிலைய ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...