'சின்ன மச்சான்' பாடலுக்கு அசத்தல் நடனம் - கோவை மாநகரட்சி மத்திய மண்டலத் தலைவரின் வைரல் வீடியோ!

கோவையில் நடைபெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சியில் சின்ன மச்சான் பாடலுக்கு மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு நடனமாடி அசத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



கோவை: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியில் மத்திய மண்டல தலைவர் நடனமாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை வ.உ.சி மைதானத்தில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இதனை காண, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர். திரையுலக பிரபலங்களும் இந்த கண்காட்சியை பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி பாடகர்கள் செந்தில், ராஜலெட்சுமி ஆகியோர் முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு விட்டு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபுதேவாவின் சின்ன மச்சான் பாடலை பாடினர்.



அப்போது, அந்த நிகழ்ச்சியை பார்வையிட வந்த கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சின்ன மச்சான் பாடலுக்கு உற்சாக நடனமாடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தற்போது இந்த நடன காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...