வடவள்ளி அருகே 5 ஆண்டுகளுக்கு பிறகு போக்குவரத்து போலீசார் நியமனம்!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவை - மருதமலை இடையேயான வடவள்ளி சாலையில் போக்குவரத்தை சரிசெய்ய போலீசார் இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: வடவள்ளி பகுதியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை-மருதமலை சாலை கோவை நகரின் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் வேளாண் பல்லைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது. மேலும் முருகப்பெருமானின் 7ஆம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.

இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் இந்த சாலையில் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். அரசு பேருந்துகள், லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் என வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். இதனால் எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படும்.

அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்கள், விஷேச நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்தை சீர் செய்வதற்கு, போக்குவரத்து போலீசார் என ஒரு போலீசார் கூட வடவள்ளி போலீஸ் நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணியில் இல்லாமல் இருந்து வந்தனர்.

இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரை பணிக்கு அமர்த்தி போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று, சில நாட்களுக்கு முன்பு, வடவள்ளி காவல்நிலையத்தில், புதிதாக போக்குவரத்து உதவி ஆய்வாளராக வாசுதேவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் வடவள்ளி-தொண்டாமுத்தூர் சந்திப்பில், போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதியில் சிக்னல் இல்லாததால் அவரே போக்குவரத்தை சீர் செய்து வாகனங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...