கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசு பேருந்து நடத்துநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு!

கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்து பல்லடம் பேருந்து நிலையம் அருகே வந்த போது பணியில் இருந்த நடத்துநர் சீனி என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகள் உதவியுடன் அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்: கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்து நடத்துநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், பயணிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராம்ராஜ் என்ற அரசுப் பேருந்து ஓட்டுநரும், மதுரையை சேர்ந்த பேருந்து நடத்துநர் சீனி என்பவரும் இன்று காலை மதுரை புறநகர் பேருந்து பணிமனையிலிருந்து கோவைக்கு வந்துள்ளனர். மீண்டும் கோவையிலிருந்து மதுரை நோக்கி பயணிகளுடன் சென்ற போது, பல்லடம் பேருந்து நிலையம் அருகே நடத்துநர் சீனிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.



இதைக் கண்ட ஓட்டுநர் ராமராஜ் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உடனடியாக பேருந்தை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



பல்லடம் அரசு மருத்துவமனையில் நடத்துநர் சீனி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து ஓட்டுநர் ராமராஜிடம் விசாரித்த போது, நடத்துநர் சீனி கடந்த வாரம் முழுவதும் டெல்லியிலிருந்ததாகவும் நேற்று மதுரை திரும்பிய நிலையில், ஒரு நாள் விடுப்பு கேட்டதாகவும், பணிமனை மேலாளர் விடுப்பு அளிக்க மறுத்ததால் சீனி பணிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

காலை முதலே நடத்துநர் சீனி மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதாகவும், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சரியான நேரத்தில் பேருந்து ஓட்டுநர் ராமராஜ், நடத்துநர் சீனியை பயணிகளோடு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்ததால் சீனி உயிர் பிழைத்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் நடத்துநர் சீனியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...