பல்லடம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சோகம்!

பல்லடம் அடுத்த வரப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பரத், நண்பர்களுடன் வதம்பச்சேரி அருகே தோட்டத்தில் உள்ள தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே நண்பர்களுடன் தொட்டியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே வரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் - அனுசுயா தம்பதி. இவர்களுக்கு பரத் மற்றும் தருண் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், பரத் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு தற்போது கிணத்துக்கடவில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள நிலையில் இன்று தனது நண்பர்களுடன் வதம்பச்சேரி அருகே தோட்டத்தில் உள்ள தொட்டியில் குளிக்க சென்றுள்ளார்.

பரத்திற்கு நீச்சல் தெரியாத நிலையில் தொட்டியில் குளிப்பதற்காக குதித்துள்ளார். நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்த பரத்தை அவரது நண்பர்கள் மீட்டுள்ளனர்.



இதுகுறித்து பரத்தின் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர். பின்பு பரத்தை சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.



நீச்சல் தெரியாமல் நண்பர்களோடு குளிக்கச் சென்ற போது கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...