துடியலூர் அருகே குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து - 3 மணி நேரம் போராடி தீ அணைப்பு!

துடியலூர் அடுத்த அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் புகை மூட்டம் காரணமாக அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. தீயணைப்புத்துறையினர் 3 மணி நேர போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதுமாக புகை மூட்டமாக காட்சியளித்தது.

துடியலூரை அடுத்துள்ள அசோகபுரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகில் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இங்கு குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன.

இங்கு அடிக்கடி மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால் தீ விபத்து ஏற்படுவது, தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இங்குள்ள குப்பைகளில் இருந்து புகை வந்துள்ளது.



தொடர்ந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திறணல் ஏற்பட்டுள்ளது.



தொடர்ந்து கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...