கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய ஆலோசனை கூட்டம்!

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றிய ஆலோசனை கூட்டத்தில், மாவீரன் தீரன் சின்னமலையின் 267வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கோவை மேற்கு மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தீரன் K.S.குழந்தைவேலு மற்றும் மாவட்ட பொருளாளர் தீரன். M.S.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

1.கோவை மேற்கு மாவட்ட மற்றும் ஒன்றிய (பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், S.S.குளம் ஒன்றியம்) வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாவீரன் தீரன் சின்னமலையின் 267வது பிறந்தநாள் விழா பொதுச்செயலாளர் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளது. இதில், கோவை மாவட்டம் சார்பாக சிறப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

2.ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி மாவீரன் தீரன் சின்னமலையின் 267வது பிறந்தநாள் விழா முடித்தவுடன் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால் பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் கொங்கு சொந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் தீரன்.E.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட விவசாய அணி செயலாளர் தீரன் மருதாச்சலம், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் தீரன் வேலு, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் தீரன் வரதராஜன், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய துணை செயலாளர் தீரன் பொன்னுசாமி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் தீரன் கொய்யா மரத்தோட்டம் மணி, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நகர செயலாளர் தீரன்.பாலு (எ) பாலகிருஷ்ணன், பெரியநாயக்கன் பாளையம் KMDK ஒன்றிய பொறுப்பாளர்கள் தீரன்.கணேசன், ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய துணை செயலாளர் தீரன்.பொன்னுசாமி நன்றியுரை கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...