கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை கரும்புகடை பகுதியிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற வேலுமணி என்பவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து 1டன் ரேஷன் அரிசி மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கோவை கரும்புக்கடை திப்புநகர் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் ஒருவர் பைக்கில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்துள்ளார். இதைக்கண்ட போலீசார் அந்த நபரை பிடித்து மூட்டைகளை ஆய்வு செய்ததில், அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்ட நபர் போத்தனூர் அன்புநகர் பகுதியை வேலுமணி என்பதும், கரும்புக்கடை சாரைமேடு பகுதியை சேர்ந்த அஜீஸ் என்பருடன் சேர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி, அதனை கேரளாவிற்கு கடத்தி அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வேலுமணியை கைது செய்த போலீசார், அதே பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான அவரது கூட்டாளியான அஜீஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...