ஆலாந்துறை வனச்சரகத்தில் காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் அணைக்க கோரிக்கை!

கோவை மாவட்டம் ஆலாந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சிமலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக எரிந்து வருகிறது. வனத்துறையினர் செடிகளை கொண்டு தீயை அணைத்து வரும் நிலையில், ஹெலிகாப்டர் மூலம் அணைக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: ஆலாந்துறை மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை ஹெலிகாப்டர் மூலம் அணைக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆலாந்துறை நாதேகவுன்னடன் புதூர் பகுதியில் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சிமலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக எரிந்து வருகிறது. வனத்துறையினர் செடிகளைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக இரவு, பகலாக தீ அணைத்து வரும் நிலையில், மலைப்பகுதி என்பதால், தீயணைப்பு வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அதிகளவு வன ஊழியர்கள், தன்னார்வலர்களும் சேர்ந்து தீயை அணைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் விமானப்படைத் தளத்தில் உள்ள ஹெலிகாப்டரை கொண்டு தீயை அணைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...