தாராபுரம் அருகே சாலையோர குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் - பரபரப்பு!

தாராபுரம் அருகே உள்ள ஐந்து சாலை பகுதியில் இருந்த குப்பைகள் தீப்பிடித்து எரிந்த நிலையில் தாராபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே சாலையோர குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு அருகிலுள்ள கரூர் சாலையில் அமராவதி ஆற்றங்கரையில் ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்த பகுதி வழியாக தினந்தோறும் சுமார் ஒரு நாளைக்கு 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.

இந்நிலையில் தாராபுரத்தில் வாழும் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தப்படும் குப்பை கழிவுகள் மற்றும் தாராபுரத்தில் இயங்கும் உணவகங்கள், இறைச்சி கடைகள் பல்வேறு வியாபார கடைகளில் குப்பை கழிவுகளை தினமும் சாலையோரம் கொட்டி விட்டு செல்கிறார்கள்.

வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் இந்த குப்பைகள் இயற்கையாகவே தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. மேலும் இந்த சாலையில் 2 மதுபான கடைகள் இருப்பதால் இரவு நேரங்களில் அங்கே அமர்ந்து மது குடிக்கும் சமூக விரோதிகள் தீ வைத்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் அந்த குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் குப்பைகள் கொழுந்து விட்டு எரிந்தது.



இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



தாராபுரத்தில் சாலை ஓரங்களில் அடிக்கடி இது போன்று நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மாசடைந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் நோய் தொற்று உருவாகுவதால் மேலும் இது போல் நடக்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...