தாராபுரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா - அழகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து பூவோடு எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்திக் கடனாக, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, தேவேந்திர தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.



தாராபுரம்: தாராபுரம் மகா மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவில், பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேவேந்திர தெருவில் உள்ளது பழமை வாய்ந்த மகா மாரியம்மன் திருக்கோவில். இந்தத் திருக்கோவிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கம்பம் எடுத்துவந்து பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு நடத்தினர்.



இந்த நிலையில், தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து தேவேந்திர தெருவை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பூவோடு எடுத்தும், பெண்கள் அழகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் பெண்கள் ஆண்கள் என இருவரும் சுமார் 10 அடி நீளம் வேலை அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.



பக்தர்கள் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து பூவோடு எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக் கடனாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தேவேந்திர தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஒரு தம்பதியினர் கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மாரியம்மனை வழிபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...