குண்டடம் அருகே சாலை விரிவாக்க பணியால் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு - 35 கிராமங்கள் குடிநீரின்றி தவிப்பு!

தாராபுரம் அடுத்த குண்டடம் பகுதியில் சாலை விரிவாக்க பணியின் காரணமாக குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால், கொக்கம்பாளையம், முத்தையம்பட்டி உள்ளிட்ட 35 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 9 மாதங்களாக முறையான குடிநீரின்றி தவித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த குண்டடம் பகுதியில் சாலை விரிவாக்க பணியின் காரணமாக குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால், 35 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் அமராவதி குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

அத்துடன் அந்தந்த கிராமங்களில் ஊராட்சி நிர்வாகம் மூலம் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீர் எடுத்து குழாய் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. கொடுமுடி காவிரியாற்றிலிருந்து பம்ப் செய்யப்பட்டு முத்தூர், காங்கயம், ஊதியூர் வழியாக குண்டடம் ஜம்பிற்கு தண்ணீர் வருகிறது.



அங்கிருந்து மேட்டுக்கடை, ஜம்பிற்கு பம்ப் செய்யப்பட்டு அங்கிருந்து நந்தவனம் பாளையம், கொக்கம்பாளையம், முத்தையம்பட்டி, பெரிய குமாரபாளையம் உள்பட சுமார் 35 கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

பெரும்பாலும் ஊராட்சிகள் மூலம் ஆழ்குழாயிலிருந்து பெறப்படும் தண்ணீர் அதிக உப்புத் தன்மையுடனோ அல்லது சப்பையாகவோ குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் சமையல் மற்றும் குடிப்பதற்கு காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றதால் குண்டடத்திலிருந்து மேட்டுக்கடை ஜம்பிற்கு வரும் குடிநீர் குழாய் முற்றிலும் பழுதாகி போனது. இதன் காரணமாக கடந்த 9 மாதங்களாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மேற்கண்ட 35 கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் விவசாய தோட்டங்களில் சென்று குடங்களில் தண்ணீர் கொண்டு வந்தும், காசு கொடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கியும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் ஆங்காங்கே குடிநீர் பிரச்சினையும் தலை தூக்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பெரும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது, பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்க பணிகள் முடிந்த நிலையிலும் இன்னும் குடிநீர் குழாய் சீரமைக்கப்படவில்லை. புதிதாக குடிநீர் குழாய் அமைத்துதான் குடிநீர் வினியோகம் செய்ய முடியும். ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகளை அதிகாரிகள் எடுத்ததாக தெரியவில்லை.

குண்டடத்திலிருந்து மானூர்பாளையம் செல்லும் குடிநீர் குழாயில் எரகாம்பட்டி அருகே, காளியம்மன் கோயிலில் பக்கத்திலிருந்து மேட்டுக்கடை ஜம்பிற்கு குழாய் அமைத்து எளிதாக இந்த பிரச்சினையை தீர்க்கலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் முனைப்பு காட்டி குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...