சொத்துவரி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்..! - பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் 50 சதவீதம் சொத்து வரி குறைக்கப்பட்டுள்ளதை, சில அரசியல் கட்சிகள் அரசியலாக்கி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இது தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



கோவை: சொத்துவரி தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டபோது மற்ற நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரிபல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இதைத் தொடர்ந்து, வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி நகராட்சிக்கு சிறப்பு சலுகையாக 50% சொத்து வரியை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



தமிழகத்தில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட போது பொள்ளாச்சி நகராட்சிக்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. மற்ற நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி அதிகமாக உள்ளது குறைக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தப்பட்டது கடந்த மார்ச் 31ஆம் தேதி 50 சதவீதம் குறைத்து அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்கு வணிகர்கள் பொதுமக்கள் தற்போது முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒரு சில அரசியல் கட்சியினர் இந்த பிரச்சனையை அரசியலாக்கி சுயலாபத்திற்காக மக்களிடம் தவறான பொய்யான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

சொத்து வரி குறைக்கப்பட்டதற்கான வழிகாட்டு முறைகள் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும். இது குறித்து எந்த சந்தேகங்கள் இருந்தாலும் நகராட்சியை பொதுமக்கள் அணுகலாம். வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...