கோவை மதுக்கரையில் போட்டோ ஸ்டூடியோ கதவை உடைத்து கேமரா திருட்டு!

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த குணசேகரன், 20ஆண்டுகளாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது கடையின் ஷட்டரை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கேமராவை மர்ம நபர்கள் திருட்டிச் சென்றனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: மதுக்கரையில் போட்டோ ஸ்டூடியோ கதவை உடைத்து கேமரா திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மதுக்கரை குவாரி ஆபிஸ் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் 20 ஆண்டுகளாக அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இன்று காலையில் வந்து பார்த்த போது, கடையின் முன் பக்க ஷட்டரை கியாஸ் கட்டிங் மூலம் வெட்டி திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, ரூ.2 லட்சம் மதிப்பிலான கேமரா திருடப்பட்டதும், உள்ளே மிளகாய் பொடியைத் தூவிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலையில் மர்ம நபர்கள் கியாஸ் கட்டிங் மூலம் ஷட்டரை உடைத்து, உள்ளே நுழைந்து சிசிடிவி கேமராவை திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் குணசேகரின் கடையின் அருகே உள்ள இளையராஜா என்பவரது, பைனான்ஸ் நிறுவனத்தின் ஷட்டரையும் மர்ம நபர்கள் வெட்ட முயன்றதும், ஆனால் ஷட்டர் கதவு சுவருடன் இணைக்கப்பட்டிருந்ததால், அங்கேயும் மிளகாய் பொடியைத் தூவி விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...