தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ் புத்தாண்டையொட்டி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, ராஜபாளையம் என மற்ற மாவட்டங்களுக்கு 110 சிறப்பு பேருந்துகளும், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மார்க்கமாக 40 பேருந்துகளும் என கோவையில் இருந்து மொத்தமாக 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


கோவை: தமிழ் புத்தாண்டையொட்டி கோவையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் அதன் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக கோவையில் தங்கி வேலை பார்த்து வரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

இவர்கள் கோவையில் இருந்து செல்லும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிக்க தயாராகி வருகின்றனர். இதனால் பேருந்து நிலையங்களில் இன்று கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷேச தினங்களில் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்புத்தாண்டையொட்டி இன்று முதல் கோவையில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, ராஜபாளையம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மார்க்கமாக பிற ஊர்களுக்கு செல்ல 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் பயணிகளின் வருகை ஏற்றபடி பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...