கோவையில் இளம்பெண்ணை கொன்று புதைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்து புதைத்த வழக்கில் குற்றவாளியான பட்டுராஜன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: இளம்பெண்ணை கொலை செய்து புதைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் பட்டுராஜன். இவரது மகள் சசிகலா (24). இவர் கடந்த 2013இல் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த வினோத் (28) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையில் சசிகலாவிற்கு, அவரது உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதை அறிந்த வினோத், சசிகலாவை தனியாக பேச அழைத்து சென்று மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலைக்கு அழைத்துச் சென்று, கொடூரமாக தாக்கியும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்தார். பின்னர் உடலை அருகே தனியார் கல்லூரி அருகே புறவழிச்சாலையில் புதைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொள்ளாச்சி மகளிர் போலீசார் வினோத்தை கைது செய்தனர். விசாரணையில் சசிகலாவை கொலை செய்து, வினோத் நகைகளை திருச்சியில் உள்ள நண்பர் ஒருவர் மூலம் விற்பனை செய்துள்ளார்.

அதை தொடர்ந்து சசிகலாவின் செல்போனிலிந்து அவரது பெற்றோர் மற்றும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தி மூலம் வினோத் என்பவரை திருமணம் செய்து கொண்டு வேறு மாவட்டத்திற்கு சென்றுவிட்டதாக அனுப்பி உள்ளார்.

இருப்பினும் போலீசார் சந்தேகத்தின் பேரில் கண்காணித்து வந்த நிலையில், வினோத்தை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் கூறிய அடையாளங்களை வைத்து சசிகலா புதைக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த போது, எழும்பு கூடுகள் மட்டுமே கிடைத்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் ஆய்வகத்திற்கு டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இறந்தது சசிகலா என்பது உறுதியானது.

மேலும் சசிகலாவின் உடலை வெறும் 2 அடி பள்ளம் தோண்டி புதைத்ததாகவும், ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் நாய் எழும்புகளை எடுத்து சென்றால் தப்பிவிடலாம் எனவும் நினைத்ததாக போலீசிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட வினோத், ஜாமீனில் வந்தார்.

இந்நிலையில் கோவை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் வழக்கில் ஆஜராகாமல் வினோத் தலைமறைவானார்.

இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் மதுரை, கிணத்துக்கடவு, பேரூர், மதுக்கரை, மலுமிச்சம்பட்டி ஆகிய இடங்களில் தேடினர். இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 2021 இல் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இளம் பெண்ணை கடத்திச் சென்று வினோத் கொலை செய்தது உறுதியானதால் அவரை குற்றவாளி என்றும், கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், மேலும் கொலை செய்யும் நோக்கத்துடன் கடத்திச் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...