பல்லடம் அருகே குப்பைகளுக்கு தீவைத்த ஊராட்சி நிர்வாகம் - கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ குப்பைகளுக்கு ஊராட்சி ஊழியர்கள் தீ வைத்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் என்ற இடத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே பல்லடம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாதக்கணக்காக குப்பைகளை கொட்டி மாதத்திற்கு ஒரு முறை தீ வைப்பது வாடிக்கை.

இந்நிலையில், முப்பது நாட்களுக்கும் மேலாக கொட்டி வைக்கப்பட்டிருந்த மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள்,துணி கழிவுகள் என சுமார் இரண்டு டன் அளவுக்குகுவிக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தீவைக்கப்பட்டது.



3 மணி நேரத்துக்கு மேலாக குப்பையில் தீ பற்றியெரிந்தது. இதனால், அதிலிருந்து வெளியேறிய அளவுக்கதிமான கரும்புகை வெளியேறியது. இதனால், அப்பகுதியே புகை மூட்டமாகக் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள், குப்பைக்கு வைக்கப்பட்டிருந்த தீயினை தண்ணீரை அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே குவிக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு ஊராட்சி நிர்வாகம் தீவைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...