உணவகத்தில் பங்குதாரர் ஆக்குவதாகக் கூறி ரூ.20 கோடி மோசடி - கோவையில் தந்தை, மகன் உட்பட 4 பேர் கைது!

கோவையில் உணவகத்தில் பங்குதாரராக சேர்ப்பதாகக்கூறி ரூ.20 கோடி ரூபாய் வரை மோசடி செய்த தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: கோவை: உணவகத்தில் பங்குதாரர் ஆக்குவதாகக் கூறி ரூ.20 கோடி மோசடி செய்த கோவையில் தந்தை, மகன் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

கோவை காரமடை உள்ளிட்ட இடங்களில் டி.என்.43 ஹோம்மேட் என்ற உணவகம் உள்ளது. கொச்சியை சேர்ந்த முஜிமோடு, அவருடைய மகன் செய்ன், மனோஜ் மொய்டு, ஆனியன் செபி ஆகியோர், இந்த ஓட்டலில் பங்குதாரர்களாக சேர்த்து லாபத்தில் பங்குதருவதாகக் கூறி ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்துள்ளனர்.

இவர்களின் வார்த்தையை நம்பி, கோவையை சேர்ந்த பாலகிருஷ்ணன் ரூ.13 கோடி கொடுத்து பங்குதாரராக சேர்ந்துள்ளார். ஈரோட்டை சேர்ந்த கோபிகிருஷ்ணா, திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த பயாஸ் உள்ளிட்ட பலரும் லட்சக்கணக்கில் பணம் அளித்துள்ளனர். இந்த பணத்தை முஜி மற்றும் 3 பேர் வேறு,வேறு கணக்குகளில் அனுப்பி மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன் உள்பட பலரும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. விஜயகுமார் ஆகியோர் உத்தரவின்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார்.

அப்போது உணவகம் நடத்துவதாகவும், பங்கு தருவதாகவும் பலரிடம் ரூ.20 கோடிக்கும்மேல் மோசடி செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக முஜிமோடு, செய்ன், மனோஜ்மோடு, ஆனியன் செபி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.



இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.17 லட்சம் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே முஜி மோடு மீது ஒசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோசடி வழக்குகள் உள்ளன. கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த மோசடி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பணத்தை இழந்த பாலகிருஷ்ணன், கோபிகிருஷ்ணன், பயாஸ் ஆகியோர் தற்போதைய பங்குதார்களாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...