கோவை ஊராட்சிச் செயலாளர்களை மிரட்டி பணம் பறிப்பு - 55 வயது முதியவர் கைது!

கோவை கிணத்துக்கடவு அருகே ஊராட்சி செயலாளர்கள் குறித்து புகார் மனு அனுப்பி மிரட்டல் விடுத்து பணம் பறித்து வந்த ராஜா என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் ராஜா(வயது 57). இவர் கீரணத்தம் ஊராட்சி அலுவலகத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பினார்.

அதில், ஊராட்சியில் செயலாளராக பணியாற்றும் பாலாஜி, போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்து உள்ளார். அவரது ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எனக்கு தர வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக ராஜாவை அழைத்து ஊராட்சி செயலாளரான பாலாஜி விவரம் கேட்டார். அதற்கு அவர், நான் இவ்வாறு புகார் மனு அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும், இல்லையென்றால் உங்களது வேலை பறிபோகும் அளவிற்கு உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்புவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன பாலாஜி, அவரிடம் ரூ.75 ஆயிரம் வழங்கினார். அதன்பிறகும், அவர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி செயலாளர்களிடம், இதுபோன்று அந்தந்த ஊராட்சிகளுக்கு புகார் மனு அனுப்பி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. மேலும் பெண் ஊராட்சி செயலாளர்களை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அச்சுறுத்தி பணம் பறித்தல் உள்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...