மூலனூர் அருகே சரக்கு வாகனத்தின் பின்சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி!

திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே சரக்கு வாகனத்தில் ஏறி 8 வயது சிறுவன் எஸ்வந்த் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடிரென வாகனம் ஓட ஆரம்பித்ததால், பின்சக்கரத்தில் சிக்கி சிறுவன் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர், இவரது மனைவி மற்றும் 8 வயது மகன் எஸ்வந்த் ஆகியோருடன் மூலனூர் அருகே உள்ள ஆலம்பாளையம் உறவினர் வீட்டிற்கு சென்றார்.

நேற்றிரவு இரவு 8 மணி அளவில் சரவணன் குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்தனர். சிறுவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது டாட்டா ஏஸ் வாகனத்தின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதமாக டாட்டா ஏஸ் வாகனம் கிளம்பியது. இதனால் பின் சக்கரத்தில் சிக்கிய எஸ்வந்த் படுகாயம் அடைந்தான்.

உடனடியாக சிறுவன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் எஸ்வந்த் காலையில் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

டாட்டா ஏஸ் வாகனத்தில் அதன் சாவி இருந்ததும், வாகனம் கியரில் இருந்ததுமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...