தாராபுரத்தில் அம்பேக்தர் பிறந்தநாள் கொண்டாட்டம் - திக, தமிழ்புலிகள் கட்சிகள் மரியாதை!

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி தாராபுரத்தில் திராவிடர் கழகம் மற்றும் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைபிடிக்கப்படுகிறது.



அதன் ஒரு பகுதியாக, அம்பேத்கரின் 133-வது பிறந்தநாளை ஒட்டி, உடுமலை சாலையில் உள்ள பெரியார் தீபத்திடலில் அலங்கரித்து வைக்கப்பட்ட அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு திராவிடக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



அதேபோன்று, அண்ணா சிலை அருகே தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.



தாராபுரம் அண்ணா சிலை அருகே தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் மாலையில் வைத்து மலர் தூவையும் மரியாதை செலுத்தினர். அதன்பிறகு சமத்துவநாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...