உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு - கண்கவர் வானவேடிக்கை!

உடுமலை மாரியம்மமன் கோவில் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான இன்று கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கிய நிலையில் கம்பம் போடுதல், கொடியேற்றம் பூவோடுஎடுத்தல் மற்றும் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் குட்டை திடல் பகுதியில் நடைபெற்ற கண்கவர் வானவேடிக்கையை ஏராளமானோர் கண்டு களித்தனர்.



மேலும் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் நிறைவு நாளன்று மாரியம்மன் யானை மற்றும் சிங்க வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. கடலூர் மாவட்டம் குட்டியாங் குப்பம் தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்த கவியரசன் பிரபு குழுவினர் வான வேடிக்கை நடத்தினர்.



இதில் பல்வேறு வகையான வெடிகள் வானத்தில் கலர் கலராக வர்ண ஜாலங்களுடன் வெடிப்பதைப் பார்த்து பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.



உடுமலை நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வான வேடிக்கையைக் கண்டுகளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...