கிணத்துக்கடவில் கழிவுநீர் கால்வாய் கட்ட நிலம் தானம் செய்தவருக்கு குவியும் பாராட்டு!

கிணத்துக்கடவு அடுத்த வடபுதூர் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கழிவுநீர் கால்வாய் அமைக்க நிலம் தானம் செய்த ரஞ்சனி என்பவருக்கு, ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அடுத்த வடபுதூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் கட்ட நிலம் தானம் செய்தவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதூர் ஊராட்சியில் அண்ணா நகர் முதல் காந்திநகர் வரை உள்ள 700 மீட்டருக்கு கழிவுநீர் கால்வாய் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்காக, அப்பகுதி சேர்ந்த சுப்பாராவ் என்பவரது மனைவி, ரஞ்சனி ஊராட்சி நிர்வாகத்திற்கு தங்களது நிலத்தை தானம் செய்தார்.

இதனிடையே, ரஞ்சனி தானம் செய்த நிலத்தில் தற்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.



இந்நிலையில், வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணிகண்டாபுரம் பகுதியில், கழிவுநீர் கால்வாய் கட்ட நிலம் தானம் செய்தவருக்கு பாராட்டு விழா, குப்பைகளை எடுக்க ஆறு லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட டிராக்டர் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.



ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பாஷா ஆகியோர் கலந்து கொண்டு நிலம் தானம் செய்த நபருக்கும், இதற்கு உதவியாக இருந்த ஊர் மக்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.



மேலும் பல ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையை ஏற்று கழிவு நீர் கால்வாய் கட்டிய ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணம்மாள், அசோக்குமார், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், பாரதிநகர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...