கருமலை பஜாரில் நிழற்குடை மற்றும் கழிப்பிடம் கட்ட பூமி பூஜை - நகர மன்ற தலைவர் பங்கேற்பு

வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியில் பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்து கீழே விழுந்த நிலையில், ரூ.7 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணி மற்றும் ரூ.19 லட்சம் மதிப்பில் புதிதாக பொது கழிப்பிடம் கட்டும் பணிக்கான பூமிபூஜையில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி பங்கேற்றார்.


கோவை: வால்பாறை அருகேயுள்ள கருமலை எஸ்டேட் பஜாரில் பயணிகள் நிழற்குடை மற்றும் கழிப்பிடம் ஆகியவற்றை புதுப்பிக்கும் பணிக்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் பஜார் பகுதியில் ஏற்கனவே இருந்த பயணிகள் நிழற்குடை பழுதடைந்து, கட்டிடம் உடைந்து கீழே விழுந்து பயணிகள் நிழற்குடைக்குள் அமர முடியாமல் இருந்து வந்தது.



இந்த நிலையில் அப்பகுதி மக்களின் நலன் கருதி சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் பயணியர் நிழற்குடையை புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜையும், அதன் அருகில் நீண்ட காலமாக மக்கள் பயன்படுத்த முடியாமல் சிதிலமடைந்த பொது கழிப்பிடமும் சுமார் 19 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ளதற்கான பூமி பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் செல்வம், 12வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அன்பரசன், நகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...