கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் - சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு பலியான சோகம்!

சரவணம்பட்டி அடுத்த சலீவன் வீதியை சேர்ந்த சக்தி திருமலா (24) என்ற இளம்பெண் கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சைக்காக அத்திப்பாளையம் பிரிவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: சரவணம்பட்டி அருகே கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகேயுள்ள சலீவன் வீதியை சேர்ந்தவர் சக்தி திருமலா (24). இவர் தனது உறவினரான சதீஷ்குமார் என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், குழந்தை இல்லாமல் உள்ளது. இதனிடையே சக்தி திருமலா கீரனத்தத்தில் உள்ள போஸ் செஸ் பார்க் என்ற ஐடி நிறுவனத்தில் அசோசியேட்டாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் செல்வபுரம் பேரூர் ரோட்டில் உள்ள ரூபா மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனையில் Dr. ருபா சரண்யா என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பிறகு வயிற்றில் உள்ள கட்டி பெரிதாகி விட்டதால் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்து,தங்களது மருத்துவமனையில் star health இன்சூரன்ஸ் கம்பெனி உடன் claim பெற வசதி இல்லை என்றும் அத்திப்பாளையம் பிரிவு சிவா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று மருத்துவர் ரூபா சரண்யாவின் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி அவர் கடந்த் 13ஆம் தேதி காலை சுமார் 11.00 மணிக்கு அத்திபாளையம் பிரிவில் உள்ள சிவா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் . இந்நிலையில் நேற்று மாலை சுமார் 16.30மணியளவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி மருத்துவமனையில் அனஸ்தீசியா மருந்து கொடுத்துள்ளனர்.

அப்பொழுது அவருக்கு திடீரென மாரடைப்பு ( cardiac arrest) ஏற்பட்டுள்ளது தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கே.ஜி மருத்துவமனைக்கு டாக்டர் ரூபா ஆம்புலன்ஸ் மூலமாக சக்தி திருமலாவை பந்தய சாலை எல்லை குட்பட்ட கே.ஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சக்தி திருமலா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறி அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர்.

சிகிச்சைக்காக சென்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...