கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - போலீசார் அதிரடி!

கோவை மாவட்டம் சூலூர் மற்றும் பெரியநாயக்கன் பாளையம் ஆகிய இருவேறு இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த கார்த்திக்ராஜா (20) மற்றும் அருள்செல்வன் (30) ஆகியோரை கைது செய்த போலீசார், 3.1 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று (15.04.2023) சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி புதூர் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சூலூர் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் சிந்தாமணி புதூரில் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் கார்த்திக் ராஜா (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 2 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல், பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் ரயில்வே ஃபீடர் சாலை அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவரது மகன் அருள்செல்வன் (30) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1.1 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், யாராவது போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை 94981-81212 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவும், 77081-00100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...