கோவையில் மனவளர்ச்சி குன்றிய மகளை நினைத்து மனஉளைச்சலுக்கு ஆளான தாய் தூக்கிட்டு தற்கொலை!

கோவை பேரூர் அருகே மனவளர்ச்சி குன்றிய மகளின் எதிர்காலத்தை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளான தாய், தனது வீட்டின் முன்பு இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் மனவளர்ச்சி குன்றிய மகளை நினைத்து வருந்திய தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்த ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது மகள் மனவளர்ச்சி குன்றியவராக இருந்ததாக தெரிகிறது.

இதனால் அந்த தாய் தனது குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து கவலையடைந்து உறவினர்களிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இளம்பெண் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் அவரது உடலை பார்த்து கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து தகவலறிந்த பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...