மத்தியில் நல்லாட்சியை உருவாக்கும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார்..! - ஆ.ராசா பெருமிதம்!

கோவை கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சியில் புதிய நிழற்குடை திறந்து வைத்து பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளதாகவும், மத்தியில் நல்லாட்சியை உருவாக்கும் தலைவராக உள்ளார் எனவும் கூறினார்.



கோவை: மத்தியில் நல்லாட்சியை உருவாக்கும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார் என நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் கூடலூர் அடுத்த கவுண்டம் பாளையம் நகராட்சியில் பல்வேறு திட்டங்களின் துவக்க விழாவில் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில், புதிய நிழற்குடை திறந்து வைத்தல், நகர்ப்புற சுகாதாரம், ஆரோக்கிய மையத்திற்கு தரைமட்ட தொட்டி, கழிவு நீர் தொட்டி மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல், வடிகால் மற்றும் வடிகால் மேல் கான்கிரீட் மூடி அமைத்தல், சமையலறை கட்டிடம் அமைத்தல்,



கென்னடி தென்றல் அவென்யூ பகுதியில் மரம் நடுதல், திருவள்ளூவர் பூங்கா சீர் அமைத்தல், பூங்கா நடைபாதை அமைத்தல், தடுப்பு சுவர் அமைத்தல், சாலை மற்றும் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட ரூபாய் 2 கோடி மதிப்பிலான திட்டங்களை நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா துவங்கி வைத்தார்.



தொடர்ந்து பொதுமக்களிடையே ஆ.ராசா பேசியதாவது:

தமிழ்நாட்டில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறார். இதனால் எதிர்கட்சிகள் அனைத்தும் வாயடைத்து போயுள்ளன. இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக நமது முதல்வர் உள்ளார்.

இந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் நீலகிரி தொகுதிக்கு பல திட்டங்களை வழங்கியுள்ளார். இந்தியாவிலுள்ள மதவாத சக்திகளை எதிர்க்கும் தலைவராக உள்ளார். மாநிலத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. மத்தியிலும் நல்லாட்சி வரும். அந்த ஆட்சியை உருவாக்கும் சக்தி மிகு தலைவராக நமது முதல்வர் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, ஆணையாளர் பால்ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...