கோவை பொள்ளாச்சி நகராட்சியில் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆய்வு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், மற்றும் பாதாள சாக்கடை திட்ட சுத்தகரிப்பு நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.



அப்போது பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



மேலும் பொள்ளாச்சி நகராட்சியை முன்மாதிரியான நகராட்சியாக கொண்டு வர செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை தயார் செய்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமான பணிகள் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

மேலும் பொள்ளாச்சி நகராட்சியை மேம்படுத்த தேவையான திட்டங்கள் குறித்து அறிக்கை வழங்கி பொள்ளாச்சி நகராட்சியை சிறந்த நகராட்சியாக மாற்றியமைக்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...