உடுமலை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் - போலீசார் தடுத்ததால் பரபரப்பு!

ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து உடுமலை ரயில் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்ற நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பை கண்டித்து உடுமலை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது.



இதற்கு கண்டனம் தெரிவித்து 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸார் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.



நகராட்சி பூங்காவில் இருந்து ஊர்வலமாக வந்த காங்கிரஸ் கட்சியினர், ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.



அப்போது, அவர்களை உள்ளே விடாமல் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் மத்திய அரசை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தை முற்றுகையிட வந்த அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் கே .தென்னரசு மாவட்டத் தலைவர், கோவிந்தராஜ், ஜனார்த்தனன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறை மாநில செயலாளர் டாக்டர் எஸ்.ஆர்.எஸ் இப்ராஹிம், மாநில பொது குழு உறுப்பினர் பி.கிட்டு சாமி, கே.கண்ணுசாமி, ஆர் முருகானந்தம், நகரத் தலைவர் கோ. ரவி,துணைத் தலைவர் ஆர் முத்துக்குமார், வட்டார தலைவர்கள் கனகராஜன், ஏ எஸ் வெங்கடேஷ்,பி. செல்லகுமார் மாவட்ட பொதுச் செயலாளர் சின்னச்சாமி, குடந்தை கண்ணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...